முஸ்லிம் இளைஞர்களுக்கு, பெற்றோர் தேசபக்தியை போதிக்க வேண்டும்; முன்னாள் மந்திரி ஈசுவரப்பா பேட்டி


முஸ்லிம் இளைஞர்களுக்கு, பெற்றோர் தேசபக்தியை போதிக்க வேண்டும்;  முன்னாள் மந்திரி ஈசுவரப்பா பேட்டி
x
தினத்தந்தி 29 Sept 2022 12:45 AM IST (Updated: 29 Sept 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

முஸ்லிம் இளைஞர்களுக்கு, பெற்றோர் தேசபக்தியை போதிக்க வேண்டும் என முன்னாள் மந்திரி ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்.

சிவமொக்கா;

முன்னாள் மந்திரி ஈசுவரப்பா நேற்று தனது வீட்டில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த நாளன்று தேச விரோத சக்திகளை தடை செய்துள்ள மத்திய அரசாங்கத்தையும், மத்திய மந்திரி அமித்ஷாவையும் பாராட்டுகிறேன். கடந்த சில ஆண்டுகளாக தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளான பி.எப்.ஐ. அமைப்புடன் சில முஸ்லிம் இளைஞர்கள் சோ்ந்து நகரிலும், மாநிலத்திலும் பல்வேறு கலவரங்களை தூண்டி மக்களை நிம்மதி இழக்க செய்தனர்.

இதுபோன்ற இயக்கங்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க மத்திய அரசு தாமதமாக செயல்பட்டாலும் சரியான நேரத்தில் இந்த அமைப்புகளுக்கு தடை விதித்தது வரவேற்கத்தக்கது. மேலும் முஸ்லிம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தேசபக்தியை போதிக்கும்படியும். பிரிவினை எண்ணங்களை விதைக்காதீர்கள் என்றும் கேட்டுகொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இதே கருத்தை சிவமொக்கா தொகுதி எம்.பி. ராகவேந்திராவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story