பெங்களூருவில் காற்று மாசை குறைக்க கூடுதல் பூங்கா


பெங்களூருவில் காற்று மாசை குறைக்க கூடுதல் பூங்கா
x
தினத்தந்தி 17 Sept 2022 12:15 AM IST (Updated: 17 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் காற்று மாசை குறைக்க கூடுதல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

பெங்களூரு:


பெங்களூருவில் சாலை ஓரங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அதிகரித்து வரும் வாகன போக்குவரத்தால், காற்று மாசு ஏற்படுகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் காற்று மாசை குறைக்கும் விதமாக கூடுதல் பூங்காக்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக ரூ.140 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தேசிய தூய காற்று திட்டத்தின் கீழ் பெங்களூருவுக்கு ரூ.140 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெங்களூரு மெட்ரோ தூண்கள், பி.எம்.டி.சி. நிலையங்கள், பணிமனைகள் ஆகிய இடங்களில் உள்ள சுவர்களில் தொங்கும் பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை பெங்களூரு மாநகராட்சி, மெட்ரோ, பெங்களூரு போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) ஆகியவை இணைந்து செயல்படுத்தபட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story