'பப்'பில் இருந்து வரும் சத்தத்தால் மக்கள் பாதிப்பு


பப்பில் இருந்து வரும் சத்தத்தால் மக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பப்பில் இருந்து வரும் சத்தத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவது குறித்து விளக்கம் அளிக்க கோரி அரசு மற்றும் போலீசாருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு பி.டி.எம். லே-அவுட் பகுதியில் ஒரு பப் உள்ளது. அந்த பப்பில் இருந்து இரவில் அதிக சத்தம் கேட்பதால், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, பப்பில் இருந்து வெளியேறும் சத்தம் காரணமாக முதியவர்கள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், அந்த பப் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி கோரி கர்நாடக ஐகோர்ட்டில் லலிதா சீனிவாசன் (வயது 81) உள்ளிட்டோர் பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தார்கள். அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், அந்த பப்பில் நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 3 மணிவரை அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிப்பதுடன், அங்கிருப்பவர்களும் சத்தம் போடுவதால், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாக வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் எதிர் தரப்பு வாதிகளாக பெங்களூரு போலீஸ் கமிஷனர், மைகோ லே-அவுட் போலீசார், கர்நாடக அரசை நியமித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த பொதுநல மனுக்கள் மீதும், பப்பில் இருந்து அதிக சத்தம் வருவது குறித்தும் உரிய விளக்கம் அளிக்கும்படி போலீசார் மற்றும் அரசு நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story