சதீஸ் ஜார்கிகோளிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்


சதீஸ் ஜார்கிகோளிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்
x

இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து கூறி சதீஸ் ஜார்கிகோளிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று மந்திரி பி.சி.பட்டீல் தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு:-

மக்கள் தக்க பாடம்

காங்கிரஸ் மாநில செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி, இந்து மதம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்காக அவருக்கு பா.ஜனதா கட்சி உள்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாநில விவசாயத்துறை மந்திரியும், சித்ரதுர்கா மாவட்ட பெறுப்பு மநதிரியுமான பி.சி.பாட்டீல் நேற்றுமுன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்து மதம் குறித்து சதீஸ் ஜார்கிகோளி அநாகரிகமாக பேசி இருக்கக்கூடாது. இவ்வளவு பேசியவர், தனது சம்பந்தப்பட்ட ஆவணங்களில் இந்து மதத்தை சேர்ந்தவர் என்று ஏன் குறிப்பிடுகிறார். சதீஸ் ஜார்கிகோளி இந்து மதம் பற்றிய வரலாறை படிக்கவில்லை. இந்து மதம் பற்றி சர்ச்சை கருத்து கூறியதை மக்கள் பொறுத்துகொள்ளமாட்டார்கள். இதில் அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

நாட்டை விற்றிருப்பார்கள்

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களின் வாழ்க்கை கடினமாகிவிடும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார். தற்போது சித்தராமையா, ஏழை மக்களுக்கு இலவச அரிசி வழங்குகிறாரா? பா.ஜனதா அரசு கொரோனா மற்றும் மழை வெள்ளம் பாதிப்பு பிரச்சினைகளை திறம்பட கையாண்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்து இருந்தால் நாட்டையே விற்றிருப்பார்கள்.

பா.ஜனதா ஜனசங்கல்ப யாத்திரையில் மக்கள் கூடுவதை காங்கிரசால் சகித்துகொள்ள முடியவில்லை. சித்தராமையா மாறுவேடமிட்டு ஜனசங்கல்ப யாத்திரைக்கு வரட்டும். அப்போது தான் அவருக்கு பா.ஜனதா மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story