கேரளாவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய நபர் கைது


கேரளாவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய நபர் கைது
x

கேரளாவில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய முக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோழிக்கோடு,

கேரளாவில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய முக்கிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோழிக்கோட்டில் நேற்று இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மலப்புரத்தைச் சேர்ந்த ஷகீல் ஹர்ஹத் என்பவரை சோதனை செய்தபோது, 112 கிராம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருள், 345 எல்.எஸ்.டி ஸ்டாம்ப்புகள் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கான 31 குழாய்கள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வளைகுடாவில் உள்ள நபருக்கு வாட்ஸப் மூலம் போன் செய்து பணத்துடன் செல்பி எடுத்து அனுப்பியதும் அதற்கேற்ப போதைப்பொருள் வழங்கப்பட்டு வந்ததும் தெரிய வந்தது.


Next Story