ஜோஷிமட் நகர் ஆபத்தை தேசிய பேரிடராக அறிவிக்க கோரிய மனு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


ஜோஷிமட் நகர் ஆபத்தை தேசிய பேரிடராக அறிவிக்க கோரிய மனு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
x

ஜோஷிமட் நகரில் ஏற்பட்டுள்ள ஆபத்தை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

புதுடெல்லி,

உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமட் நகர பகுதிகள் பூமியில் புதைந்து வருகின்றன. இதனால் அங்குள்ள வீடுகள், கட்டடங்கள், சாலைகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கான காரணம் உறுதி செய்யப்படாத நிலையில், அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்களுக்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில் ஜோஷிமட் நகர் ஆபத்தை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் சுவாமி சரஸ்வதி என்பவா் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'மனித உயிா்களையும் அவா்களின் சுற்றுச்சூழலையும் விலையாக அளித்து எந்த வளா்ச்சியையும் பெறத் தேவையில்லை. அதுபோன்று ஏதேனும் நிகழ்வதாயிருந்தால், அதனை போா்க்கால அடிப்படையில் உடனடியாகத் தடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

ஜோஷிமட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலுக்கு பெரிய அளவிலான தொழில் வளா்ச்சி நடவடிக்கைகளே காரணம். அந்தப் பகுதி மக்களுக்கு உடனடியாக நிதியுதவியும் இழப்பீடும் வழங்க வேண்டும்' என்று கோரியுள்ளாா். இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்க உள்ளது.


Next Story