Normal
தென்னிந்தியாவிலேயே புதுவையில் தான் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது: கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
புதுவையில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளதாக புதுவையின் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுவை,
தென்னிந்தியாவிலேயே புதுவையில் தான் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளதாக புதுவையின் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தாலும், மாநில அரசானது குறிப்பிட்ட அளவிற்கு குறைத்தது.
சுற்றி இருக்கக்கூடிய மாநிலங்கள் விலையை குறைப்பதற்கு தயக்கம் காட்டினாலும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு புதுவையில் பெட்ரோல், டீசல் விலை தென்னிந்தியாவை காட்டிலும் குறைக்கப்பட்டு உள்ளது என்று புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
Related Tags :
Next Story