மாநில அரசுகள் ஒப்பு கொண்டால், பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்படும் - நிர்மலா சீதாராமன்
மாநில அரசுகள் ஒப்பு கொண்டால், பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்படும் என மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பிஎச்டிசிசிஐ என்ற தொழில் அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:
2023 - 24 பட்ஜெட்டில் பொது மூலதன செலவு 33 சதவீதம் அதிகரித்து ரூ.10 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.தொடர்ச்சியாக 3 - 4 ஆண்டுகளாக, பொது மூலதன செலவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
பட்ஜெட் தாக்கலின் போதும் அதனை மனதில் வைத்துள்ளோம். பொது மூலதன செலவுக்கு இந்த பட்ஜெட்டில் உண்மையான கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. அனைத்து மாநில அரசுகள் ஒப்பு கொண்டால், பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்படும்.
எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று மாநில அரசுகளை அறிவுறுத்துகிறோம். ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்துகிறோம் என்றார்.
Related Tags :
Next Story