கர்நாடகத்தில் பி.எப்.ஐ. அமைப்பின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்-போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா


கர்நாடகத்தில் பி.எப்.ஐ. அமைப்பின்    சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்-போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா
x

கர்நாடகத்தில் பி.எப்.ஐ. அமைப்பின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: மாநில போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- நாட்டில் பி.எப்.ஐ. அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன்படி உரிய நடவடிக்கைகள் சட்டப்படி மேற்கொள்ளப்படும். கர்நாடகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பதற்றமான பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பி.எப்.ஐ. பெயரில் எந்த பணிகளும் மேற்கொள்ள முடியாது.

அந்த அமைப்புக்கு ஆதரவாக யார் கொடுத்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அந்த அமைப்பின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். அவற்றின் சொத்துகள் குறித்து ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளோம். அந்த அமைப்புக்கு கர்நாடகத்தில் எவ்வளவு சொத்துகள் உள்ளது என்பது பற்றி தகவல்களை சேகரித்து வருகிறோம். இந்த தகவல்கள் அனைத்தும் கிடைத்த பிறகு அந்த சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story