போஸ்டரில் நடிகரின் புகைப்படத்தை பயன்படுத்திய காங்கிரஸ் கட்சியினர்-பரபரப்பு


போஸ்டரில் நடிகரின் புகைப்படத்தை   பயன்படுத்திய காங்கிரஸ் கட்சியினர்-பரபரப்பு
x

போஸ்டரில் நடிகரின் புகைப்படத்தை காங்கிரஸ் கட்சியினர் பயன்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆட்சியில் 40 சதவீத கமிஷன் புகார் குற்றச்சாட்டையடுத்து 40 சதவீத சர்க்கார் என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதில் தனது அனுமதியின்றி தன்னுடைய புகைப்படத்துடன் போஸ்டர்கள் வைக்கப்பட்டு உள்ளதாக கூறி பெங்களூருவை சேர்ந்த புதுமுக நடிகர் அகில் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், அவர் தனது புகைப்படத்தை பயன்படுத்தியதற்கு காங்கிரஸ் கட்சியினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், அவர்கள் நடத்தும் இந்த போஸ்டர் விவகாரத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றார்.



Next Story