கன்னட தயாரிப்பாளரை கொல்ல திட்டம்
கன்னட தயாரிப்பாளரை கொல்ல திட்டமிட்ட பிரபல ரவுயை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:-
பெங்களூரு கே.ஜி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மாச்சய்யா குடியிருப்பை சேர்ந்தவர் ராஜேஸ் என்ற கரியா (வயது 40). இவர், பிரபல ரவுடி ஆவார். பிரபல ரவுடிகளாக இருந்த பரந்தாமா, பாம்பே ரவியின் நெருங்கிய கூட்டாளிகளாகவும் ராஜேஸ் இருந்தார். கடந்த 2006-ம் ஆண்டில் இருந்தே ராஜேஸ் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது கொலை முயற்சி, கொள்ளை, கடத்தல், போதைப்பொருள் விற்பனை உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ராஜேஸ் பெயர் கே.ஜி.நகர் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ராஜேஸ் மீதுள்ள குற்ற வழக்குகளில் கோர்ட்டில் ஆஜராகும்படி பல முறை உத்தரவிட்டு இருந்தும், அவர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.
அதே நேரத்தில் கன்னட சினமா தயாரிப்பாளரான உமாபதியை கொலை செய்ய திட்டமிட்ட வழக்குகளிலும் போலீசாரிடம் சிக்காமல் ராஜேஸ் தலைமறைவாக இருந்தார். அவரை கைது செய்ய கே.ஜி.நகர் போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில், ரவுடி ராஜேசை கே.ஜி.நகர் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.