இந்த நன்னாள் சமூக நல்லிணக்கத்தை ஆழப்படுத்தட்டும் - பிரதமர் மோடி ஈஸ்டர் வாழ்த்து...!
பிரதமர் மோடி ஈஸ்டர் பண்டிகை வாழ்த்து தெரிவித்தார்.
டெல்லி,
கிறிஸ்தவ மத கடவுளான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட 3-ம் நாளில் கல்லறையில் இருந்து உடலுடன் உயிர்த்து எழுந்தார். இந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் கிறிஸ்தவ மதத்தினரால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
இதனிடையே, கிறிஸ்த மத பண்டிகையான ஈஸ்டர் இன்று கிறிஸ்தவ மதத்தினரால் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ மத வழிபாட்டு தலங்களில் வழிபாட்டுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி ஈஸ்டர் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
அனைவருக்கும் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்கள். இந்த நன்னாள் நமது சமூகத்தில் நல்லிணக்கத்தை ஆழப்படுத்தட்டும். சமுதாயத்திற்கு சேவை செய்யவும், தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிக்கவும் இது மக்களை ஊக்குவிக்கட்டும். இந்த நாளில் இயேசு கிறிஸ்துவின் பக்தி எண்ணங்களை நினைவில் கொள்வோம்' என்றார்.