'மிகச் சிறந்த ஜனாதிபதியாக முர்மு திகழ்வார்' பிரதமர் மோடி நம்பிக்கை
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மோடி
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'சமூகத்துக்காகவும், ஏழை, அடித்தட்டு, விளிம்புநிலை மக்கள் அதிகாரம் பெறுவதற்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்தவர் முர்மு. நல்ல நிர்வாக அனுபவத்தைப் பெற்றவரான அவர், கவர்னராகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டவர். கொள்கை விஷயங்கள் குறித்த முர்முவின் புரிதலும், அவரின் இரக்கத்தன்மையும் நம் நாட்டுக்கு பெரிதும் பயனளிக்கும். நம் நாட்டின் மிகச் சிறந்த ஜனாதிபதியாக திரவுபதி முர்மு திகழ்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.