பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கூட்டம்!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கூட்டம்!
x

பாஜக ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகள் மற்றும் துணை முதல் மந்திரிகள் பங்கேற்ற கூட்டம் இன்று நடைபெற்றது.

புதுடெல்லி,

பாஜக ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகள் மற்றும் துணை முதல் மந்திரிகள் பங்கேற்ற கூட்டம் இன்று நடைபெற்றது.

தலைநகர் புதுடெல்லியில், பாஜக தலைமையகத்தில், பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆளும் மாநிலங்களின் 12 முதல் மந்திரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே பி நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் மக்கள் நல திட்டங்களின் அறிக்கையை, கட்சி தலைமையிடம் சம்பந்தப்பட்ட மாநில முதல் மந்திரிகள் சமர்ப்பித்தனர். நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றும் இயக்கம் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

ஏழை மட்டும் பின் தங்கிய மக்களின் வளர்ச்சிக்காக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் குறித்தும் மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

Next Story