மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் பிரதமர் மோடி


மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் பிரதமர் மோடி
x

பிரதமர் மோடி மக்களவை உறுப்பினராக பதவியேற்றார்.

டெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் 3வது முறையாக மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சியமைத்தது.

இதனிடையே, நாடாளுமன்றம் இன்று கூடியது. அப்போது, பிரதமர் மோடி மக்களவை உறுப்பினராக பதவியேற்று கொண்டார். தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் பிரதமர் மோடிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பிரதமர் மோடியை தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெற்ற எஞ்சிய 542 எம்.பி.க்களும் 18வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்று வருகின்றனர். சபாநாயகர் எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.


Next Story