71 ஆயிரம் பேருக்கு நாளை பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி


71 ஆயிரம் பேருக்கு  நாளை பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி
x

அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்.

புதுடெல்லி,

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மத்திய அரசுத் துறைகளின் மனித வளங்கள் குறித்து பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதனடிப்படையில், அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் சிறப்பு பணி நியமனங்கள் மூலம் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் இடங்களை நிரப்பிட பிரதமர் மோடி அப்போது அறிவுறுத்தினார்.

நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் ரோஜ்கார் மேளா' என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிவைத்தார்.

இந்தநிலையில், அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி நாளை காலை வழங்குகிறார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் காலை 10:30 மணிக்கு நியமனக் கடிதங்களை விநியோகிப்பார், மேலும் இந்த நிகழ்வில் இந்த நியமனம் பெற்றவர்களிடம் உரையாற்றுவார்.


Related Tags :
Next Story