மத்திய மந்திரி அமித்ஷா பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


மத்திய மந்திரி அமித்ஷா பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x

மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய மந்திரி அமித்ஷா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"அமித்ஷா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் ஏழைகளின் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதில் அவர் ஆர்வமாக உள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு எந்திரத்தை மேம்படுத்துவதற்கும், கூட்டுறவுத் துறையை மேலும் மேம்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து, சிறந்த நிர்வாகியாக முத்திரை பதித்துள்ளார். பா.ஜ.க.வை வலுப்படுத்துவதில் அவரது பங்கு பாராட்டத்தக்கது."

இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.


Birthday wishes to Shri @AmitShah Ji. He is passionate about India's progress and ensuring a better quality of life for the poor. He has made a mark as an outstanding administrator, making notable contributions to enhancing India's security apparatus and further developing the…

— Narendra Modi (@narendramodi) October 22, 2023 ">Also Read:



Next Story