டெல்லியில் பி-20 இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை


டெல்லியில் பி-20 இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை
x

டெல்லியில் பி-20 இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.

புதுடெல்லி,

பி-20 இந்தியா உச்சி மாநாடு கடந்த 25-ந்தேதியில் இருந்து தொடங்கி 27-ந்தேதி வரை நடந்து வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் 55 நாடுகளை சேர்ந்த 1,500 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த பி-20 உச்சி மாநாடு ஆனது, சர்வதேச வர்த்தக சமூகத்துடன் கூடிய அதிகாரப்பூர்வ ஜி-20 பேச்சுவார்த்தைக்கான அமைப்பு ஆகும். இந்த உச்சி மாநாடானது, பி-20 இந்தியா ஆர்.ஏ.ஐ.எஸ்.இ. என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டது.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் ஒரு தெளிவான கவனத்துடன் கூடிய இந்த பி-20 ஆனது ஜி-20 குழுக்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி டெல்லியில் பி-20 இந்தியா உச்சி மாநாட்டில் இன்று உரையாற்றுகிறார். இதுபற்றி அவர் எக்சில் (முன்பு டுவிட்டர்) வெளியிட்ட பதிவில், பி-20 இந்தியா உச்சி மாநாடு 2023-ல் இன்று மதியம் 12 மணியளவில் நான் உரையாற்ற உள்ளேன். வர்த்தக உலகில் பணியாற்றும் ஒரு விரிவான அளவிலான பங்குதாரர்களை இந்த தளம் ஒன்றிணைத்து கொண்டு வருகிறது என அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story