3 மாநில சட்டசபை தேர்தல் முடிவு : தொண்டர்களின் உழைப்பிற்கு பாராட்டு - வாக்களித்த மக்களுக்கு நன்றி - பிரதமர் மோடி
3 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
3 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில்,
மீண்டும் பணியாற்ற என்டிபிபி பாஜக கூட்டணிக்கு ஆசி அளித்த நாகாலாந்து மக்களுக்கு நன்றி.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு இரட்டை என்ஜீன் அரசு பாடுபடும். இந்த தீர்ப்பை பெற கடுமையாக உழைத்த தொண்டர்களுக்கு பாராட்டுகள்.திரிபுராவுக்கு நன்றி. வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஓட்டு கிடைத்தது. மாநிலத்தின் வளர்ச்சி பாதைக்கு பாஜ., தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
அடிமட்ட அளவில், கடுமையாக உழைத்த பா.ஜ., தொண்டர்களை பார்த்து பெருமைப்படுகிறேன். மேகாலயா சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேகாலயாவின் வளர்ச்சி பாதையை மேம்படுத்தவும், மாநில மக்களுக்கு அதிகாரம் கிடைப்பதிலல் கவனம் செலுத்தவும் கடினமாக உழைத்துக் கொண்டே இருப்போம். தொண்டர்களின் கடுமையான உழைப்பிற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.