ஜெர்மனி, அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி


ஜெர்மனி, அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி
x

ஜெர்மனி, அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பினார்.

புதுடெல்லி,

இந்திய பிரதமர் மோடி ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்த 25-ம் தேதி ஜெர்மனி சென்றார். அங்கு ஸ்குலோஸ் எல்மாவ் நகரில் நடத்த ஜி-7 உச்சி மாநாட்டில் அவர் 26,27-ந் தேதிகளில் கலந்துகொண்டார். இத்துடன் ஜெர்மனி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றார்.

அபுதாபி வந்தடைந்த பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் விமான நிலையத்திற்கே நேரில் வந்து வரவேற்றார்.

பின்னர் இருநாட்டு தலைவர்களும் பொருளாதாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி நேற்று இரவு வந்தடைந்தார்.

ஜெர்மனி, அமீரக பயணத்தை முடித்துவிட்டு இந்தியா வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் அதிகாரிகள் வரவேற்றனர்.


Next Story