விடுதியில் தங்கி படித்த 10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்; விடுதி வார்டனுக்கு போலீஸ் வலைவீச்சு


விடுதியில் தங்கி படித்த 10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்; விடுதி வார்டனுக்கு போலீஸ் வலைவீச்சு
x

விடுதியில் தங்கி படித்த 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விடுதி வார்டனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காக்கிநாடா:

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் கொண்டைய்ய பாளையம் பகுதியில் தனியார் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் கொத்த பள்ளியை சேர்ந்த விஜயகுமார் (வயது 60) என்பவர் வார்டனாக வேலை செய்து வருகிறார்.

வெளியூரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார். அப்போது விடுதி வார்டன் விஜயகுமார் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த நிலையில் பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சிறுமி தனது வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரது பெற்றோர் சிறுமியை டாக்டரிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர் 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். விசாரணையில் விடுதி வார்டன் விஜயகுமார் தன்னை மிரட்டி வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காக்கிநாடா போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள விடுதி வார்டனை தேடி வருகின்றனர்.


Next Story