தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல்; நடிகர் தர்ஷன் மீது போலீசில் புகார்
தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் தர்ஷன் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இந்த நிலையில், நடிகர் தர்ஷன் மீது தயாரிப்பாளர் பரத் கெங்கேரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் நடிகர் தர்ஷனுடன் இணைந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்தா என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருந்தோம். இந்த படத்தில் நடிக்க தர்ஷனும் சம்மதம் தெரிவித்தார். அதன்படி, அந்த சினிமா படப்பிடிப்பும் தொடங்கியது. ஆனால் பணப்பிரச்சினை காரணமாக தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது. இந்த விவகாரம் தொடர்பாக 2 பேருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதற்காக என்னை செல்போனில் தொடர்பு கொண்டு நடிகர் தர்ஷன் கொலை மிரட்டல் விடுத்தார்.
அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரத் கூறியுள்ளார். பரத் கொடுத்த புகாரின் பேரில் கெங்கேரி போலீஸ் நிலையத்தில் நடிகர் தர்ஷன் மீது என்.சி.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் தர்ஷன் பேசுவது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான செல்போன் உரையாடல் அடங்கிய ஆடியோவையும் கெங்கேரி போலீசாரிடம் பரத் வழங்கி உள்ளார்.