பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து


பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
x

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி இன்று பாகிஸ்தானை மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது.

தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறிய நிலையில், கோலி- பாண்ட்யா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. குறிப்பாக விராட் கோலி 57 பந்துகளில் 82 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய விராட் கோலியை பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்தி வருகின்றனர். மத்திய உள்துறை மந்திரி தனது டுவீட்டர் பதிவில், டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் சிறப்பாக தொடக்கம். தீபாவளி தொடங்கிவிட்டது... சிறப்பாக விளையாடிய விராட் கோலிக்கு வாழ்த்துக்கள். இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இந்திய அணிக்கும் விராட் கோலிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


Next Story