பொங்கல், மகர சங்கராந்தி எதிரொலி; திருப்பதியில் கூட்டம் குறைந்ததால் நேரடி தரிசன முறை அமல்


பொங்கல், மகர சங்கராந்தி எதிரொலி; திருப்பதியில் கூட்டம் குறைந்ததால் நேரடி தரிசன முறை அமல்
x

தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

திருப்பதி,

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதைப் போல, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இதன் காரணமாக திருப்பதியில் தற்போது நேரடி தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தற்போது திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் இன்றி, சுமார் அரை மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டுச் செல்கின்றனர்.


Next Story