நடிகர் நிகிலின் புதிய படத்திற்கு இன்று பூஜை
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நடிகர் நிகிலின் புதிய படத்திற்கு இன்று பூஜை செய்யப்படுகிறது.
பெங்களூரு:-
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில். இவர் கன்னட திரைப்படங்களில் நடித்து அரசியலுக்கு வந்தார். ஆனால் மண்டியா நாடாளுமன்ற தேர்தல், ராமநகர் சட்டசபை தேர்தலிலும் அவர் படுதோல்வியை சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவர் நடித்த சீதாராம் கல்யாணம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து 2 கன்னட மொழி படங்களில் நடிக்க அவர் முடிவு செய்தார். ஆனால் இதுவரை அந்த படங்கள் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கிடையே நடிகர் நிகிலின் புதிய படத்தை இலங்கையை சேர்ந்த லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான பூஜை இன்று (புதன்கிழமை) பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.