அசுத்த நீரில் துணிகளை துவைக்கும் ஏழைகள்


அசுத்த நீரில் துணிகளை துவைக்கும் ஏழைகள்
x
தினத்தந்தி 2 Dec 2022 9:14 PM GMT (Updated: 2 Dec 2022 9:14 PM GMT)

பெங்களூருவில் அசுத்த நீரில் துணிகளை துவைக்கும் ஏழைகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

தொம்மசந்திரா:-

பெங்களூருவில் உள்ள ஏரிகளில் முக்கிய ஏரியாக கருதப்படுவது வர்த்தூர் ஏரி. பெங்களூருவில் ராஜகால்வாய்களில் சேகரமாகும் நீர் வர்த்தூர் ஏரியில்தான் கலக்கிறது. பெங்களூருவில் குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் மூலம் மக்களுக்கு காவிரி நீர் சுத்திகரித்து வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் ஏழை மக்களுக்கு அந்த சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர். அதுபோல் வர்த்தூர் பகுதியில் உள்ள ஏழை மக்கள், தண்ணீர் தட்டுப்பாட்டால் ஏரிக்கு சென்று தங்கள் துணிகளை துவைத்து அணிந்து கொள்கின்றனர். அசுத்த நீரில் துணிகளை துவைத்து அணிந்து கொள்வதால் அது அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story