பெண்ணின் ஆபாச புகைப்படத்தை முகநூலில் வெளியிட்ட கணவர்


பெண்ணின் ஆபாச புகைப்படத்தை   முகநூலில் வெளியிட்ட கணவர்
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணின் ஆபாச புகைப்படத்தை முகநூலில் கணவர் வெளியிட்டார்.

பெங்களூரு: பெங்களூரு சுங்கதகட்டே பகுதியில் 37 வயது பெண் வசிக்கிறார். இவரது கணவர் நூதன். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில், அந்த பெண்ணின் ஆபாச புகைப்படங்கள் முகநூலில் வெளியாகி இருந்தது. இதுபற்றி மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அப்போது நூதன் தான், போலியான முகநூல் கணக்கு தொடங்கி, அதில் தனது ஆபாச புகைப்படங்களை வெளியிட்டது பெண்ணுக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக நூதன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகி விட்ட அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.


Next Story