பெங்களூருவில் இன்று மின்தடை- பெஸ்காம் தகவல்


பெங்களூருவில் இன்று மின்தடை-  பெஸ்காம் தகவல்
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இன்று (வியாழக்கிழமை) மின்சார வினியோகம் தடை செய்யப்படுகிறது.

பெங்களூரு: பெங்களூருவில் இன்று (வியாழக்கிழமை) மின்சார வினியோகம் தடை செய்யப்படுகிறது.

பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் (பெஸ்காம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கே.ஜி.ஹள்ளி

பெங்களூருவில் இன்று (வியாழக்கிழமை) மின் வயர்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் எச்.பி.ஆர். லே-அவுட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. எச்.பி.ஆர். முதல் மற்றும் 2-வது பிளாக், யாசின் நகர், சுபாஷ் லே-அவுட், ராமா கோவில் ரோடு, ராம்தேவ் கார்டன், டீச்சர்ஸ் காலனி, எச்.பி.ஆர். 3-வது பிளாக்.

சிவராமையா லே-அவுட், ரிங் ரோடு சர்வீஸ் ரோடு, கே.கே.ஹள்ளி, சி.எம்.ஆர். ரோடு, கம்மனஹள்ளி மெயின்ரோடு, லிங்கராஜபுரம், ஜானகிராம் லே-அவுட், கனகதாசா லே-அவுட், கோவிந்தபுரம் மெயின்ரோடு, ரசாத்நகர், பரிதா ஷூ பேக்டரி, அரபிக் கல்லூரி, கே.ஜி.ஹள்ளி, கோவிந்தபுரா கிராமம், வினோபாநகர், பி.எம்.லே-அவுட், ஆரோக்கியம்மா லே-அவுட், காவேரி கார்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

நாகேனஹள்ளி

எச்.பி.ஆர். 4-வது பிளாக், 5-வது பிளாக், நாகவரா மெயின்ரோடு, நாகவரா, என்.ஜே.கே. கார்மெண்ட்ஸ், பைரன்குன்டே, எச்.கே.பி.கே. கல்லூரி, வித்யா சாகர், தனிசந்திரா, ஆர்.கே. ஹெக்டே நகர், கே.நாராயண்புரா, என்.என்.ஹள்ளி, மத்திய கலால்வரி அலுவலகம், ஹெண்ணூர் மெயின்ரோடு, எச்.ஆர்.பி.ஆர். 3-வது பிளாக், ஆயில் மில் ரோடு, அரவிந்த்நகர்.

நேரு ரோடு, பெத்தல் தெரு, ஏ.கே.காலனி, எச்.ஆர்.பி.ஆர். முதல் பிளாக், 80 அடி ரோடு, சி.எம்.ஆர். ரோடு, கர்லே, ஹெக்டே நகர், நாகேனஹள்ளி, போலீஸ் குடியிருப்பு வளாகம், கெம்பேகவுடா, சபரிநகர், பாரதிய சிட்டி, நூர்நகர் பாரத்மாத் லே-அவுட், இதயத்நகர், லிட்கர் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இவ்வாறு பெஸ்காம் தெரிவித்துள்ளது.


Next Story