மின்சாரம் தாக்கி கர்ப்பிணி யானை சாவு


மின்சாரம் தாக்கி கர்ப்பிணி யானை சாவு
x

மின்சாரம் தாக்கி கர்ப்பிணி யானை செத்தது.

குடகு: கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா மஞ்சள்ளி பகுதியில் இரைத்தேடி வனப்பகுதியில் இருந்து கிராமப்பகுதிக்கு வந்த 25 வயது பெண் யானை ஒன்று, காபி தோட்டத்திற்குள் புகுந்தது. அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்வயரில் காட்டுயானையின் கால்பட்டது. இதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவம் இடத்திலேேய யானை இறந்தது. இது குறித்து அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்தனர். மேலும் கால்நடை மருத்துவர் முஜிப், செத்துகிடந்த யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தார்.

பின்னர் அதே இடத்தில் யானை உடல் புதைக்கப்பட்டது. இதில் யானை கர்ப்பமாக இருந்ததும், இரை தேடி வந்த போது அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்ததில் உயிரிழந்ததும் தெரியவந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் விராஜ்பேட்டை தாலுகா நெல்லுதிகேரியில் அறுந்துவிழுந்த மின்கம்பியை மிதித்த 2 காட்டு யானைகள் உயிரிழந்த சோகம் நடந்திருந்தது. இந்த நிலையில் மேலும் ஒரு கர்ப்பிணி யானை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story