கர்ப்பிணி மர்ம சாவு; மரத்தில் தூக்கில் தொங்கினார்


கர்ப்பிணி மர்ம சாவு;  மரத்தில் தூக்கில் தொங்கினார்
x

கர்ப்பிணி மர்மமான முறையில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

பெங்களூரு: பெங்களூரு வடக்கு தாலுகா பைனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அனிதா (வயது 28). ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அனிதா மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் அவர் கிராமத்தின் ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ள மரத்தில் மர்மமான முறையில் சடலமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை ெசய்யப்பட்டாரா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து பெங்களூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story