சிறுவர்கள் மற்றும் மாணவர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய ஜனாதிபதி திரவுபதி முர்மு
சிறுவர்கள் மற்றும் மாணவர்களை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து, அர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடினார் திரவுபதி முர்மு.
புதுடெல்லி,
சகோதர அன்பினை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாக கருதுவோரின் மணிக்கட்டில் அன்பின் அடையாளமாக ராக்கி கயிறு கட்டி வாழ்த்து பெறுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்வாகும். ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்பு சகோதரிக்கு பரிசு அளிப்பது வழக்கம். குறிப்பாக வட இந்தியாவில் இந்த பண்டிகை பிரபலமாக உள்ளது. சமீபகாலமாக தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.
நாடு முழுக்க ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜனாதிபதி மாளிகையில் ரக்ஷா பந்தன் கொண்டாடினார். இந்த ஆண்டு ரக்ஷா பந்தனுக்கு பல்வேறு பள்ளிகள் மற்றும் நிறுவனங்களை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் மாணவர்களை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து, அர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடினார்.
ஜனாதிபதி மாளிகையில், திரவுபதி முர்முவின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் தொடர்பான அறிவிப்பு மற்றும் புகைப்படங்கள், ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் டுவீட் செய்யப்பட்டு உள்ளது.