ஜனாதிபதி தேர்தல் 2 சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி - ராகுல்காந்தி


ஜனாதிபதி தேர்தல் 2 சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி - ராகுல்காந்தி
x

கோப்புப்படம்

ஜனாதிபதி தேர்தல் 2 சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா நேற்று மனுதாக்கல் செய்தார். அப்போது உடன் இருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக யஷ்வந்த் சின்காவை ஆதரிக்கின்றன. இத்தேர்தல் 2 தனிநபர்களுக்கு இடையிலான போட்டி அல்ல, 2 சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி.

கோபம், வெறுப்பு கொண்ட ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துக்கு எதிரான போர்தான் இந்த தேர்தல்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story