மணிப்பூரில் பைரன் சிங் ஆட்சியை கலைக்க வேண்டும் - ப.சிதம்பரம்


மணிப்பூரில் பைரன் சிங் ஆட்சியை கலைக்க வேண்டும் - ப.சிதம்பரம்
x
தினத்தந்தி 20 July 2023 3:28 PM IST (Updated: 20 July 2023 3:48 PM IST)
t-max-icont-min-icon

மணிப்பூரில் பைரன் சிங் ஆட்சியை கலைக்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மணிப்பூர் வன்முறை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே செல்லும் நிலையில், இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. மணிப்பூரின் இந்த கொடூர சம்பவத்துக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மணிப்பூரில் பைரன் சிங் ஆட்சியை கலைக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

"அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வெளிநாடுகளுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், ஏதோ ஒன்றைத் திறப்பதற்காக சென்ற பிரதமர் நரேந்திரமோடி, மணிப்பூர் மக்களைப் பற்றி சிறிதும் சிந்திக்கவில்லை.

மணிப்பூர் பற்றிய சிந்தனை வர அவரைத் தூண்டியது எது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?;மணிப்பூர் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றத்தின் கொடூர வீடியோவா அவருக்கு நினைவூட்டியது?; இப்போது பிரதமர் செய்ய வேண்டிய முதல் காரியம், மணிப்பூரில் பைரன் சிங்கின் அரசை கலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதுதான்".


Next Story