பிறந்த நாளையொட்டி தேவேகவுடாவுக்கு பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து


பிறந்த நாளையொட்டி தேவேகவுடாவுக்கு பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x

பிறந்த நாளையொட்டி தேவேகவுடாவுக்கு பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.

பெங்களூரு: பிறந்த நாளையொட்டி தேவேகவுடாவுக்கு பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.

பிரதமர் மோடி

முன்னாள் பிரதமர் தேவேகவுடா நேற்று தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி பிரதமர் மோடி உள்பட நாட்டின் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறினர். பிரதமர் தனது வாழ்த்து செய்தியில், 'தேவேகவுடாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் மரியாதைக்குரிய தலைவர். இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும், உடல் ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடிக்கு நன்றி கூறியுள்ள தேவேகவுடா, 'பிறந்தநாள் வாழ்த்து கூறிய தங்களுக்கு நன்றி. நேரத்தை ஒதுக்கி இதய பூர்வமாக வாழ்த்து கூறிய உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தேவேகவுடாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.

மு.க.ஸ்டாலின்

அவர், 'உடல் ஆரோக்கியம், செல்வம், நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து கர்நாடகத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்' என தெரிவித்துள்ளார். கட்சிகளை தாண்டி முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் பல்வேறு துறைகளின் மந்திரிகளும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறியுள்ளனர்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து கூறியுள்ளனர். தேவேகவுடா தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story