பிரதமர் மோடி இன்று அயோத்தி செல்கிறார்..!


பிரதமர் மோடி இன்று அயோத்தி செல்கிறார்..!
x

தீபாவளியையொட்டி பிரதமர் மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியா நகருக்கு செல்கிறார்

அயோத்தியா,

தீபாவளியையொட்டி பிரதமர் மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியா நகருக்கு செல்கிறார். மாலை 5 மணியளவில் அங்குள்ள பகவான் ராம் லாலாவை பிரதமர் வழிபடுகிறார்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த தலத்தை அவர் ஆய்வு செய்கிறார். ராமர் கோயில் கட்டுமானப் பணிகளையும் அவர் ஆய்வு செய்கிறார். 6.30 மணியளவில் சரயு நதியின் புதிய படித்துறையில் ஆரத்தி நிகழ்ச்சியை பார்வையிடுகிறார். பிரம்மாண்டமான தீப உற்சவ கொண்டாட்டத்தையம் அவர் தொடங்கி வைக்கிறார். 15 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.


Related Tags :
Next Story