உலக அளவில் இந்தியா பொருளாதார முன்னேற்றம்அடைய பிரதமர் மோடி உழைத்து வருகிறார்


உலக அளவில் இந்தியா பொருளாதார முன்னேற்றம்அடைய பிரதமர் மோடி உழைத்து வருகிறார்
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உலக அளவில் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய பிரதமர் மோடி உழைத்து வருகிறார் என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.

உப்பள்ளி:-

பொருளாதார முன்னேற்றம்

தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் ஸ்ரீ சித்தாரோட சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியதாவது:-

பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம் அடைந்து காணப்படுகிறது. இந்த முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடிதான் காரணம். உலகில் பொருளாதாரத்தில் இந்தியாவை மூன்றாவது இடத்திற்கு கொண்டுவருவதற்கு மோடி அயராது உழைத்து வருகிறார். இதற்காக சில ஆக்கபூர்வமான சில திட்டங்களை மோடி கொண்டு வந்து கொண்டிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் இதுவரை மக்களுக்கு எந்த திட்டங்களையும் முறையாக செயல்படுத்தவில்லை.

200 யூனிட் மின்சாரம்

புதியதாக ஒரு வாக்குறுதி அளித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கூறி வருகின்றனர். இந்த அறிவிப்பிற்கு காரணம் அவர்கள் ஆட்சியில் மின்சார தட்டுபாடு இருந்தது. ஆனால் பா.ஜனதா ஆட்சியில் மின்சார தட்டுப்பாடு இல்லை.

எனவே மக்கள் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம். மக்களை திசை திருப்பும் நோக்கில் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.தார்வார் மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. எனவே இனி 24 மணி நேரமும் தடையில்லாத குடிநீர் கிடைக்கும். வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

8 கோடி வீடுகள்

இதற்கு முன்பு நடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 16 லட்சம் இலவச வீடுகள் மட்டுமே கட்டி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பா.ஜனதா ஆட்சியில் 8 கோடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இது பா.ஜனதாவின் சாதனை. இன்று உலக நாடுகளே இந்தியாவை திரும்பி பார்க்கிறது என்றால், அதற்கு நரேந்திர மோடியின் ஆட்சிதான் காரணம்.

கர்நாடகத்தில் அவரது தேர்தல் பிரசாரம் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரும். நிச்சயம் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெறும். மீண்டும் பா.ஜனதாவின் ஆட்சி அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story