பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா - 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வழங்க திட்டம்


பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா - 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வழங்க திட்டம்
x

‘ரோஸ்கர் மேளா’ என்ற மாபெரும் வேலைவாய்ப்புத் திருவிழாவை பிரதமர் மோடி தொடக்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் 'ரோஸ்கர் மேளா' என்ற மாபெரும் வேலைவாய்ப்புத் திருவிழாவை வரும் 22-ந்தேதி(சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, பல்வேறு துறைகளில் பணிக்கு சேர்ந்த 75,000 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி உரையாற்ற உள்ளார். இந்த திட்டத்தின்படி நாடு முழுவதிலும் இருந்து தேர்வாகும் நபர்கள், அமைச்சகங்கள், மத்திய அரசுத் துறைகளின் பணிகளில் சேருவார்கள்.

ஏற்கனவே பல்வேறு துறைகளிலும் காலியாக இருக்கும் மற்றும் ஒதுக்கப்பட்ட பணியிடங்களை நிரப்புமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கும் கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்தார். இந்த வேலைவாய்ப்பு இயக்கத்தில் யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் போன்றவை மூலம் தேர்வுகள் நடத்தி ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story