ஆசியான்-இந்தியா மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அடுத்த வாரம் இந்தோனேசியா செல்கிறார்
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் மோடி அந்நாட்டுக்கு செல்கிறார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் இந்தோனேசியா செல்கிறார். 6, 7-ந் தேதிகளில் அங்கு பயணம் மேற்கொள்ளும் அவர், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் மற்றும் இந்தியா மாநாட்டில் பங்கேற்கிறார். இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மேலும் அங்கு நடக்கும் கிழக்காசிய மாநாட்டிலும் மோடி கலந்து கொள்வார்.
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் மோடி அந்நாட்டுக்கு செல்கிறார்.
தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் பேச்சுவார்த்தையில், அந்த நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தக, பாதுகாப்பு உறவை மேம்படுத்துவது, மையப்பொருளாக இருக்கும்.
மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story