பிரதமர் மோடியின் பிரமாண்ட ரங்கோலி
பிரதமர் மோடியின் பிரமாண்ட ரங்கோலி
பெங்களூரு: இந்திய திருநாட்டின் பிரதமர் மோடிக்கு நேற்று 72-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி பா.ஜனதாவினர் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அதுபோல் பொதுமக்களும் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி அவரை சிறப்பிக்கும் வகையில் இனிப்பு வழங்கியும், சாகசம் செய்தும் கவுரவப்படுத்தினர்.
அதுபோல் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பிரம்மாவரில் பிரதமர் மோடியின் பிரமாண்ட உருவம் ரங்கோலியில் உருவாக்கப்பட்டு இருந்தது. 12 அடி நீளம், 7.5 அடி அகலத்தில் பிரதமரின் ரங்கோலியை ஸ்பூர்த்தி ஆச்சார், அஸ்வதி ஆச்சார், ஆதித்யா பூஜாரி ஆகியோர் 15 மணி நேரத்தில் வடிவமைத்து அசத்தினர்.
Related Tags :
Next Story