'அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம்' பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு கருவியாக மாறியுள்ளது: பிரதமர் மோடி


அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு கருவியாக மாறியுள்ளது: பிரதமர் மோடி
x

பிரதமரின் 'அனைவருக்கும் வீட்டு வசதி' திட்டத்தின் கீழ், 4.51 லட்சம் வீடுகளை இன்று பிரதமர் மோடி பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.

புதுடெல்லி,

பிரதமரின் 'அனைவருக்கும் வீட்டு வசதி' திட்டத்தின் கீழ், மத்திய பிரதேசத்தில் கட்டப்பட்ட 4.51 லட்சம் வீடுகளை இன்று காணொலி முறையில் பிரதமர் நரேந்திர மோடி பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது, "இந்த வீடுகளில் மின்சாரம், குடிநீர் இணைப்பு, கழிப்பறை மற்றும் எரிவாயு இணைப்பு என அனைத்து வசதிகளும் இருக்கும். நாட்டில் சமூக பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முக்கிய ஊடகமாக 'அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம்' மாறியுள்ளது.3.5 கோடி குடும்பங்களின் கனவுகளை நிறைவேற்றியுள்ளது எங்கள் அரசின் பெரும் அதிர்ஷ்டம்.

கடந்த 8 ஆண்டுகளில் 3.5 கோடி குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஏழைகள் மற்றும் வறுமைக் கோட்டில் வாழ்பவர்களின் நலனுக்காக மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. வீட்டு வசதி வாரியங்களுக்கு கட்டிடங்கள் கட்ட அரசின் மொத்த செலவு ரூ.22 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது" என தெரிவித்தார்.


Next Story