டெல்லியில் தமிழ் புத்தாண்டு விழா : அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - பிரதமர் மோடி


டெல்லியில் தமிழ் புத்தாண்டு விழா : அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 13 April 2023 9:00 PM IST (Updated: 13 April 2023 11:36 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் நடக்கும் தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி மத்திய மந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.

புதுடெல்லி,

தமிழ் புத்தாண்டு விழா உலகமெங்கும் உள்ள தமிழர்களால் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் மத்திய இணைமந்திரி எல்.முருகன், தமிழ் புத்தாண்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளார். அதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். விழாவில் பிரதமர் மோடி,மத்திய மந்திரிகள் பங்கேற்றுள்ளனர். மத்திய இணை மந்திரி எல்.முருகன் இல்லத்தில் தமிழ்புத்தாண்டு விழா நடக்கிறது.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என கூறி பிரதமர் மோடி பேசினார்.

உலகின் பழமையான மொழி தமிழ், ஒவ்வொரு இந்தியனும் தமிழ் மொழி குறித்து பெருமைப்படுகின்றனர். சென்னையிலிருந்து கலிபோர்னியா வரை, மதுரையில் இருந்து மெல்போர்ன் வரை, கோயம்புத்தூரில் இருந்து கேப் டவுன் வரை, செலமில் இருந்து சிங்கப்பூர் வரை, தங்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைத் தம்முடன் சுமந்து சென்ற தமிழ் மக்களைக் காணலாம். பொங்கலாகட்டும், புத்தாண்டாகட்டும், அவை உலகம் முழுவதும் கொண்டாப்படுகின்றன.

பலமுறை பல சாதனை செய்த தமிழர்கள் பற்றி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசி உள்ளேன் என்றார். உலகின் பழமையான மொழி தமிழ். இதற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகிறோம். தமிழ் இலக்கியமும் அதிகமாக மதிக்கப்படுகிறது. தமிழரின் பண்பு குறித்து தமிழ்த் திரையுலகம் நமக்குச் சின்னச் சின்னப் படைப்புகளை வழங்கி உள்ளது. ராஜாஜி, காமராஜ் உள்ளிட்ட தலைவர்களை நினைவுகூர்ந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.


Related Tags :
Next Story