உத்தரபிரதேசம்: பண்டேல்கண்ட் அதிவேக விரைவு சாலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி


உத்தரபிரதேசம்: பண்டேல்கண்ட் அதிவேக விரைவு சாலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
x

Image Courtesy: ANI 

தினத்தந்தி 13 July 2022 7:49 PM IST (Updated: 13 July 2022 7:51 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில், 14 ஆயிரத்து 850 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட பண்டேல்கண்ட் விரைவுச்சாலையை 16-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநில விரைவுச்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நான்கு வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின் பணிகள் தொடங்கப்பட்டு 28 மாதங்கள் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

சுமார் 14 ஆயிரத்து 850 கோடி செலவில் 296 கிமீ நீளத்தில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

சித்ரகூடில் உள்ள கோண்டா கிராமத்தில் உள்ள என்.எச்-35-ல் தொடங்கும் இந்த சாலையானது, பண்டா,மஹோபா, ஹமிர்பூர், ஜலான், ஔரையா மற்றும் எட்டாவா ஆகிய 8 மாவட்டங்கள் வழியாக செல்கிறது. மேலும், இந்த சாலையானது ஆக்ரா- லக்னோ விரைவுச் சாலையுடன் இணைகிறது.

இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட பண்டேல்கண்ட் விரைவுச்சாலையை ஜூலை 16 -ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.


Next Story