பிரதமரின் 15 அம்ச திட்டப்பணிகளை உடனே முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு கலெக்டர் அஸ்வதி உத்தரவு


பிரதமரின் 15 அம்ச திட்டப்பணிகளை உடனே முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு கலெக்டர் அஸ்வதி உத்தரவு
x

மண்டியாவில் பிரதமரின் 15 அம்ச திட்டப்பணிகளை உடனே முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.

மண்டியா;


மண்டியா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிரதமரின் புதிய 15 அம்ச திட்டங்கள் மற்றும் ஆசிரியர் தின கொண்டாட்டம் குறித்து கலெக்டர் அஸ்வதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது கலெக்டர் அஸ்வதி பேசியதாவது:-

பொதுக்கல்வித்துறை, திறன் மேம்பாடு, பட்டு வளர்ச்சி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடந்து வரும் பணிகளை உடனே முடிக்க வேண்டும்.

பிரதமரின் புதிய 15 அம்ச திட்டங்களின் கீழ் ஒவ்வொரு துறைகளிலும் மேற்கொண்டு வரும் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்குள் முடிக்கவேண்டும். நிலுவையில் உள்ள பணிகள் குறித்து உடனே அறிக்கை அளிக்கவேண்டும்.

மேலும் ஆசிரியர் தினம், பி.ஆர். அம்பேத்கர் பவனில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.. இதில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும். தென் மண்டலம் மற்றும் வடக்கு மண்டலத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கவுரவிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story