வீடுகளில் விபசாரம்; பெண்கள் உள்பட 8 பேர் கைது
வீடுகளில் விபசாரம் நடத்திய பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு:
பெங்களூரு கெங்கேரி மற்றும் சோழதேவனஹள்ளியில் உள்ள வீடுகளில் விபசாரம் நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த 2 வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு இளம்பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, 2 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 8 பேரும், மேற்கு வங்காளம், திரிபுராவில் இருந்து இளம்பெண்களை அழைத்து வந்து, அவர்களை விபசாரத்தில் தள்ளி பணம் சம்பாதித்தது தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கெங்கேரி, சோழதேவனஹள்ளி போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story