சூதாட்ட விடுதிகளை மூடாவிட்டால் போராட்டம்


சூதாட்ட விடுதிகளை மூடாவிட்டால் போராட்டம்
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சூதாட்ட விடுதிகளை மூடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று தேசிய ஜனநாயக வாலிபர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் சில இடங்களில் சூதாட்டம் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் புகார்கள் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுக்கிறது. இந்த நிலையில் மங்களூருவில் செயல்பட்டு வரும் சூதாட்ட விடுதிகளை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க கோரி தேசிய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அந்த பகுதியில் உள்ள விடுதி முன்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் பேசுகையில், மங்களூருவில் மதுபான விடுதிகளில், சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மங்களூரு போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. ஆனால் அவர்கள் அதைகண்டு கொள்ளாமல், விடுதிகளுக்கு சார்பாக செயல்பட்டு வருகின்றனர். சூதாட்டத்தால் ஏழை மக்கள் சிலர் ஈடுபடுவதால் அவர்களது குடும்பம் பாதிக்கப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மங்களூருவில் வணிக வளாகங்களில் விடுதிகள் பெயரில் சூதாட்டம் நடத்தப்படுவதை போலீசார் தடுக்க வேண்டும். இல்லையென்றால் போலீசாருக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அந்த அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story