மணல் லாரிகளை மடக்கி பிடித்து பொதுமக்கள் போராட்டம்


மணல் லாரிகளை மடக்கி பிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

செல்லகெரே அருகே மணல் லாரிகளை மடக்கி பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிக்கமகளூரு

சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தாலுகா துர்காவரா கிராமத்தின் வழியாக ஹேமாவதி ஆற்றில் இருந்து லாரிகளில் மணல் எடுத்து செல்லப்பட்டு வருகிறது. இந்த லாரிகளால் சாலைகள் சேதமடைந்ததுடன், காற்று மாசுப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அந்த லாரிகள் வழித்தடத்தை மாற்றும்படி கிராம மக்கள் தாசில்தாரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் மாலை ஹேமாவதி ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்த லாரிகளை மடக்கி பிடித்தனர். பின்னர் சாலையில் அமர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் செல்லகெரே போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் மணல் லாரிகளை சாலை மோசமாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் சாலையில் புழுதி பறக்கிறது. இந்த புழுதியால் பலர் சுவாச கோளாறால் அவதிப்படுகின்றனர். எனவே இந்த லாரிகள் வருவதை தடுக்கவேண்டும். சேதமடைந்த சாலைகளை சீரமைத்து கொடுக்கவேண்டும் என்று கூறினர். இதை கேட்ட போலீசார் லாரிகள் மாற்று பாதைகளில் இயக்கப்படும். சேதமடைந்த சாலைகள் சீரமைத்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


Next Story