பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியானது; மாநில அளவில் தட்சிண கன்னடா முதல் இடம் பிடித்தது
கர்நாடகவில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாநில அளவில் தட்சிண கன்னடா முதல் இடம் பிடித்ததுள்ளது.
மங்களூரு;
கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நடந்தது. மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது.
இந்த தேர்வில் பல மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் முழு மதிப்பெண் பெற்றனர். தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் தட்சிண கன்னடா மாவட்டம் மீண்டும் முதலிடத்தை பிடித்தது. தட்சிண கன்னடா மாவட்டம் 88.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
கடந்த 2020-ம் ஆண்டில் பி.யூ.சி. தேர்வில் தட்சிண கன்னடா மாவட்டம் தான் முதலிடம் பிடித்தது. அப்போது 90.71 சதவீத தேர்ச்சி பெற்ற தட்சிண கன்னடாவில் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டத்தில் 2 மாணவர்கள் 600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
Related Tags :
Next Story