பி.யு.சி. 2-ம் ஆண்டு துணைத்தேர்வு வருகிற 12-ந்தேதி தொடக்கம்
பி.யு.சி. 2-ம் ஆண்டு துணைத்தேர்வு வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பி.யு.சி. 2-ம் ஆண்டுக்கான தேர்வு கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்றது. இதையடுத்து தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இந்த தேர்வில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்து இருந்தனர். இந்த நிலையில் துணை தேர்வு எழுதுவதற்காக 1.85 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
பி.யு.சி. 2-ம் ஆண்டு துணைத்தேர்வு வருகிற 12-ந்தேதி நடக்க உள்ளது. இதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 12-ந்தேதி தொடங்கும் இந்த தேர்வு வருகிற 25-ந்தேதி வரை நடக்க உள்ளது.
Related Tags :
Next Story