புல்வாமா தீவிரவாத தாக்குதல்; வீரர்களின் தியாகத்தை இந்தியா எப்போதும் நினைவுகூரும் - ராகுல் காந்தி


புல்வாமா தீவிரவாத தாக்குதல்; வீரர்களின் தியாகத்தை இந்தியா எப்போதும் நினைவுகூரும் - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 14 Feb 2023 9:51 AM IST (Updated: 14 Feb 2023 9:53 AM IST)
t-max-icont-min-icon

புல்வாமா தாக்குதலில் வீரர்களின் தியாகத்தை இந்தியா எப்போதும் நினைவுகூரும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் ,

2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் (சிஆர்பிஎஃப்) வாகனங்கள் சென்றுகொண்டிருந்தது. அந்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படையினர் 2019 பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானின் பாலகோட்டில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (பிப்.14) அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு ராகுல் காந்தி எம்.பி இன்று அஞ்சலி செலுத்தினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் . வீரர்களின் தியாகத்தை இந்தியா எப்போதும் நினைவுகூரும் என தெரிவித்துள்ளார். என தெரிவித்துள்ளார்.


Next Story