சுவப்னா சுரேசுக்கு போலி பட்டப்படிப்பு சான்றிதழ் தயாரித்து கொடுத்த பஞ்சாப் ஆசாமி கைது


சுவப்னா சுரேசுக்கு போலி பட்டப்படிப்பு சான்றிதழ் தயாரித்து கொடுத்த பஞ்சாப் ஆசாமி கைது
x

திருவனந்தபுரம் ஐக்கிய அமீரக தூதரக பார்சல் மூலமாக தங்கம் கடத்திய வழக்கில் கைதானவர் சுவப்னா சுரேஷ்.

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் ஐக்கிய அமீரக தூதரக பார்சல் மூலமாக தங்கம் கடத்திய வழக்கில் கைதானவர் சுவப்னா சுரேஷ். இந்த கடத்தல் சம்பவத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரின் சிபாரிசின் பேரில் சுவப்னா சுரேஷ் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விண்வெளி ஐ.டி. பூங்காவில் மேலாளராக பணியில் சேர்ந்தார். அவருக்கு சம்பளமாக மாதம் ரூ.3.14 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. இந்த வேலையில் சேருவதற்காக சுவப்னா சுரேஷ் மும்பை பாபாசாகிப் பல்கலைக்கழகத்தில் படித்ததற்கான பி.காம். சான்றிதழை விண்ணப்பத்துடன் அளித்திருந்தார். ஆனால் அந்த சான்றிதழ் போலியானது என்று பின்னர் தெரியவந்தது. இது தொடர்பாக திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசார் சுவப்னா சுரேஷ் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சுவப்னா சுரேசுக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்த சச்சின்தாஸ் என்பது தெரியவந்தது. அவரை 2 ஆண்டுகளாக ேதடி வந்த நிைலயில், அமிர்தசரஸ் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story